ஒரு மாதத்தில் 20 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தயாரிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாதத்தில் 20 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைத் தயாரித்துள்ளதாக சைடஸ் கடிலா நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள சைடஸ் கடிலா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் பட்டேல் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இந்திய மருந்து நிறுவனங்கள் ஒருமாதக் காலத்தில் 20 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார். கடிலா நிறுவனம் முப்பது டன் மருந்து உட்பொருளைத் தயாரிக்க உள்ளதாகவும், அது 15 கோடி மாத்திரைகளுக்குச் சமமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் தேவையான அளவு மாத்திரைகள் உள்ளதாகவும் பங்கஜ் பட்டேல் குறிப்பிட்டார்.
Comments