மின் வழங்கல் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்க மத்திய அரசு திட்டம்

0 3190

மின் வழங்கல் நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் மூலதனக் கடன், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் நாட்டின் மொத்த மின்தேவை கடந்த ஆண்டைவிட 29 விழுக்காடு குறைந்துள்ளது. 2019 ஏப்ரல் 10ஆம் தேதி 170 ஜிகாவாட்டாக இருந்த மின்தேவை, 2020 ஏப்ரல் பத்தாம் தேதி 121 ஜிகாவாட்டாகக் குறைந்துள்ளது.

தேவை குறைந்துள்ளதால் கட்டணம் மூலம் வரும் வருமானமும் குறைந்து, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மின் வழங்கல் நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் மூலதனக் கடன் வழங்குவது, வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க மத்திய மின்துறை பரிசீலித்து வருகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் இவை செயல்பாட்டுக்கு வரும். ஏற்கெனவே மின்வழங்கல் நிறுவனங்கள் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவையைச் செலுத்த 3 மாதக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments