கொரோனா எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை குறைவதால் ஜி 20 நாடுகள் தடுமாற்றம்
கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பு தொடர்பான உடன்பாட்டை எட்டுவதில் ஜி 20 நாடுகள் தடுமாறி வருகின்றன.
கொரோனா பாதிப்பால் உலக அளவில் எரிபொருளின் தேவை வெகுவாக குறைந்துள்ளதாலும், சவூதி - ரஷ்யா இடையேயான கட்டணக் குறைப்புப் போராலும் கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையில் நிலைத்தன்மையைக் கொண்டு வரும் வகையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பாக ஜி 20 நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்கள் கூட்டம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்றது.
இதில் மே ஜூன் மாதங்களில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்ருக்கு 1 கோடி பேரல்கள் குறைப்பது என்றும் பின்னர் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை படிப்படியாக குறைப்பது என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இது விலை உயர்வுக்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சந்தேகம் தெரிவித்து, மெக்சிகோ எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளாலும் பலன் இல்லாத நிலையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை
Comments