தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி வெளியிடும் அறிவிப்பை முழுமையாக ஏற்பது என தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளதாக கூறினார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 58 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக சண்முகம் விளக்கம் அளித்தார் டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு, தமிழகம் திரும்பிய அனைவருக்கும் வைரஸ் தொற்று தொடர்பாக பரிசோதனை முடிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த 7-ஆம் தேதி சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கணவன் மனைவி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்ததாக சுகாதாரத்துறையினர் இன்று காலை உறுதிப்படுத்தினர். இதன் மூலம் தமிழகத்தில் கொரொனா பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
Comments