நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க உள்ளதாக தகவல்

0 15758

நாட்டை 3 மண்டலங்களாகப் பிரித்துப் படிப்படியாக ஊரடங்கை விலக்கிக்கொள்ளப் பிரதமர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு, ஊரடங்கு விலக்கு, பொருளாதாரச் சீரமைப்பு ஆகியவை குறித்து வியாழனன்று உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உயிர்களைக் காப்பதிலும், வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் நாட்டைச் சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 மண்டலங்களாகப் பிரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகம் பாதித்த சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு தொடரும். குறைந்த பாதிப்புள்ள மஞ்சள் மண்டலத்தில் கண்காணிப்புடன் மக்கள் நடமாட்டம், பொருளாதாரச் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் முன்போல் வழக்கமான செயல்பாடு அனுமதிக்கப்படும். நாட்டில் 400 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments