டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததை மறைத்ததாக செயற்பொறியாளர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

0 2554

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தகவலை மறைத்து, கொரோனா பரவ காரணமாக இருந்ததாக மேட்டூர் அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஒருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்காமல், வழக்கம்போல் அவர் பணிக்குச் சென்று வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் 53 வயதான அந்த உதவி செயற்பொறியாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments