சாம்பல் கழிவில் சிக்கி சிறுவன் உட்பட இருவர் பலி ; மேலும் 4 பேர் மாயம்

0 1823

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவு தேக்கி வைக்கப்பட்டிருந்த குளத்தில் உடைப்பு ஏற்பட்டதில் சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 2 பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சிறுவனின் தாய், சகோதரி உள்ளிட்ட மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த குளத்தில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய சாம்பல் கழிவுகள், விவசாய நிலங்களிலும் தேங்கியுள்ளது.

10 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் சிங்ராலியில் கடந்த ஓராண்டில் இதுபோன்ற சாம்பல் கழிவு உடைப்பு ஏற்படுவது இது 3வது முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments