ஊரடங்கை நீட்டிப்பது என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

0 8280

ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி சரியான முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா ஊரடங்கை முன்கூட்டியே அமல்படுத்தியதாலேயே பல வளர்ந்த நாடுகளை விட நிலைமை மேம்பட்டதாக உள்ளது என கெஜ்ரிவால் கூறியுள்ளார். இப்போது அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், ஊரடங்கால் கிடைத்த நன்மைகளை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இதைத் தவிர்க்க, ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments