நோய் தொற்று உச்சகட்டத்தை அடையாவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - பிரிட்டன் அரசு

0 1641

பிரிட்டனில் கொரோனா தொற்று இதுவரை உச்சகட்டத்தை அடையவில்லை என்பதால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியாது என சுகாதார அமைச்சர் மாட் ஹேன்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நேற்று மட்டும் ஒரே நாளில் 980 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இவர்களையும் சேர்த்து அங்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் பிபிசி க்கு பேட்டி அளித்த அமைச்சர் மாட் ஹேன்காக், தொற்று வேகம் குறைந்து விட்டதாக இதுவரை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்றார். கொரோனா தடுப்புக்காக பிரிட்டன் அரசு 3 வாரங்களுக்கு முன்னர் ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு தொடர்ந்தால் இறப்பு எண்ணிக்கையை 20 ஆயிரத்திற்குள் நிறுத்தி விடலாம் என அங்குள்ள மருத்துவர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments