தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3858

சென்னையில் ஒரு அரசு மருத்துவர், இரண்டு தனியார் மருத்துவர்கள் உட்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

வண்ணாரப்பேட்டை சி.எஸ்.ஐ ரெயினி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கும் கீழ்ப்பாக்கத்தில் நியூ ஹோப் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூ ஹோப் மருத்துவமனை மருத்துவரோடு பகுதி நேரமாகப் பணிபுரிந்து வந்த பெரம்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாட்கள் என 93 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments