கொரோனாவின் தீவிரத் தன்மையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தீவிரத் தன்மையில் இருக்கும் நோயாளிகளுக்கு நியூ யார்க்கின் 2 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடீஸ் பிளாஸ்மா எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து நோயாளிகளுக்கு செலுத்துவதே இந்த சிகிச்சை முறை.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் 35 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் ஆன்டிபாடீஸ் பிளாஸ்மாவை 4 பேருக்கு செலுத்தலாம்.
கடந்த 1918 ல் உலகை தாக்கிய ஸ்பானிஷ் புளூவின் போதும் இந்த சிகிச்சை முறை சோதித்து பார்க்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூ யார்க்கின் ஹுஸ்டன் மெதாடிஸ் மலுத்துவமனையிலும் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் முடிவுகள் வெளிவர மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
Comments