கொரோனா பரவும் விதம் 3டி படக்காட்சி
கொரோனா தொற்று பாதித்த நபரின் இருமல் எப்படி அருகில் உள்ளவர்களுக்கு தொற்றை பரப்புகிறது என்பதை விளக்க, சூப்பர் மார்க்கெட் பின்னணியில் 3டி படக்காட்சி ஒன்றை பின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது அல்லது இருமும் போது வெளியாகும் திரவ துளிகள் வாயிலாகவே கொரோனா வைரஸ் அடுத்தவர்களுக்கு பரவுகிறது. மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் கொரோனா நபர் தும்மும் போதோ இருமும் போதோ வெளியாகும் திரவத்துளிகள் காற்றில் கலந்து ஒரு படலமாக மாறுகிறது.
காற்றில் பரவும் இந்த படலம் மறைய 6 நிமிடம் வரைஆகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த படலத்தை சுவாசிக்கும் மற்றவர்களிடம் கொரோனா மிக எளிதாக பரவி விடுகிறது என்பதை இந்த 3டி அனிமேஷன் படம் தெளிவாக சித்தரிக்கிறது. எனவே அதிக மக்கள் கூட்டம் உள்ள கடைகள், உணவு விடுதிகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை தவிர்த்து விட்டால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து விடலாம் என்பது இந்த விஞ்ஞானிகளின் அறிவுரை.
Comments