மருந்து ஏற்றுமதிக்கு முன்னுரிமை நாடுகளின் பட்டியல்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்வதற்கான முன்னுரிமை நாடுகளின் பட்டியலை இந்தியா தயாரித்து வருகிறது.
மலேரியா நோய்க்கு மருந்தாகப் பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளுக்கு சாதகமான பயன்களை தருவதால் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் அமெரிக்கா, பிரேசில் நாடுகளின் அதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்துத் மருந்து ஏற்றுமதிக்கு இருந்த தடை பகுதியளவு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒருகோடியே 40 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், பாராசிட்டமால் மருந்தையும் ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது. இதையடுத்து மாத்திரை ஏற்றுமதி செய்ய வேண்டிய நாடுகளின் முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்து வருகிறது.
முதல் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, டொமினிக்கன் குடியரசு, பிரேசில், பக்ரைன், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் ஆகியவை உள்ளன.
Comments