அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

0 1370

உலகிலேயே முதல்முறையாக  அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக வல்லரசான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 108 பேர் பலியாகியுள்ளதாகவும், இதையும் சேர்த்து அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 679ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில் 5 லட்சத்தை தாண்டிவிட்டது என்றும், அதிகபட்சமாக நியூயார்க்கில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments