இந்தியாவில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை

0 2067

இந்தியாவில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

அரசு ஆய்வகங்கள் 146, தனியார் ஆய்வகங்கள் 67 என மொத்தம் 213 ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் நேற்றிரவு 9 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 330 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆட்கள் எண்ணிக்கையில் கணக்கிட்டால் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 34 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று மட்டும் 15 ஆயிரத்து 663 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 433 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments