இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,447 ஆகவும்: பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்வு

0 3069

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 447 ஆகவும், பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 188 பேர் குணமடைந்துள்ளனர். 110 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, 44 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில், 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 25 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 21 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 473 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 43 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில், 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 32 பேர் குணமாகியுள்ளனர். 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கேரளத்தில் இதுவரை 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 123 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மூவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஆந்திரத்தில் 363 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 7 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 308 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 31 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 207 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 177 பேருக்கும், பஞ்சாப்பில் 132 பேருக்கும், மேற்குவங்கத்தில் 116 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அசாமில் 29 பேருக்கும், மணிப்பூரில் இருவருக்கும், அருணாச்சலம், திரிபுரா, மிசோரமில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும், லட்சத்தீவு, தாத்ரா-நாகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களிலும் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்தியாவில் இதுவரை 7 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 643 பேர் குணமடைந்துள்ளனர். 239 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

 மேலும் தகவல் அறிய : https://news.google.com/covid19/map?hl=en-IN&gl=IN&ceid=IN:en

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments