கொரோனா தொற்றுக்கு பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு !
பிரேசில் நாட்டில் அபூர்வ பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவன் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள அமேசான் மழைக்காடுகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வரும் யனோமாமி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரேசிலின் ஆளுகைக்கு உட்பட்ட ரோர்மானியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தான். சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து யனோமாமி பழங்குடியின மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Comments