வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

0 6824

ஊடரங்கு நீடித்து வரும் நிலையில் சென்னையில் இரவு நேரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்தி ஆவணங்களை சரிபார்க்கின்றனர்.

வடபழனி சிக்னல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் தங்களிடம் கடுமை காட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரை அவரது கணவர், அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது தடுத்து நிறுத்திய போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வந்த போது தனது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துவிட்டதாக கே.கே.நகரைச் சேர்ந்த ஒருவர் வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments