கொரோனா பிடியில் இறுகும் தமிழகம் நாளுக்கு நாள் உயரும் பாதிப்பு
கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து, தமிழக மாவட்ட பட்டியலில் 2- வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை, 172 பேருடன் பட்டியலில் தொடர்ந்து, முதலிடம் வகிக்கிறது.
கொரோனா பீதி, நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து வருகிறது. தனி நபர் இடைவெளியை மக்கள், தொடர்ந்து மீறி வருவதால் எந்த நேரத்திலும் 2- வது கட்டத்தில் இருந்து கொரோனா, 3 - வது கட்டத்திற்கு மாற வாய்ப்பு உள்ளதாக மருத்துவ துறையினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 77 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, மேலும் 9 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை172 ஆக அதிகரித்து, பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால், அங்கு, கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் 60 பேரும், திருநெல்வேலியில் 56 பேரும், திண்டுக்கல்லில் 54 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்லில் 41 பேருக்கும், தேனியில் 40 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
செங்கற்பட்டில் மேலும் 12 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது.
ராணிப்பேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, அங்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.
திருப்பூரில் 26 பேரும், மதுரையில் 25 பேரும், தூத்துக்குடியில் 24 பேரும், கரூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 23 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Comments