ஊரடங்கு உத்தரவை மே 1ம் தேதி வரை நீட்டித்து பஞ்சாப் அரசு உத்தரவு
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை மே 1ம் தேதி வரை நீட்டித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முழுஅடைப்பு அடுத்த 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள முழு அடைப்பை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக ஒடிசா அறிவித்த ஒரு நாள் கழித்து, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தங்கள் மாநிலத்தில் இதே முடிவை எடுக்க இருப்பதாக அறிவித்தார்.
எனினும் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இறுதி அழைப்பு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் முழு அடைப்பு வரும் மே 1-ஆம் தேதி வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING:
— KBS Sidhu, IAS, Spl. Chief Secretary, Punjab. (@kbssidhu1961) April 10, 2020
PUNJAB CABINET @capt_amarinder UNANIMOUSLY APPROVES EXTENSION OF PUNJAB CURFEW/ LOCKDOWN till 30 April, 2020/ 1st May, 2020.
Extension by 21 days from today. Strict enforcement.
Comments