தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் ஊரடங்கை மீறி ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

0 2785

ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் ஜெய்ஷே முகமது இயக்கத் தளபதியின் இறுதிச் சடங்கில் பெரும் திரளாக இஸ்லாமியர்கள் திரண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதியான சாஜத் நவாப் தார் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திரண்டவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments