கொரோனா கொடூரம் துத்துக்குடியில் மூதாட்டி உயிரிழப்பு

0 14330

டெல்லியில் இருந்து திரும்பிய கொரோனா தொற்றுள்ளவர் வந்து சென்ற காய்கறிக் கடையிலிருந்து, கொரோனா தொற்றுக்குள்ளான தூத்துக்குடியை சேர்ந்த 72 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் கையுறை மற்றும் முககவசம் இன்றி அத்தியாவசியப் பொருள் வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

டெல்லியில் இருந்து கொரோனா தொற்றுடன் தூத்துக்குடிக்கு திரும்பியவரால் அடுத்தடுத்து 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லி ரிட்டர்ன் சென்று வந்த கடைக்கு , அத்தியாவசிய பொருளான காய்கறி வாங்க சென்ற தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கும் கொரோனா நோய் தொற்றிக் கொண்டது.

கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்தினறலால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான மூதாட்டியின் மகனும், லேப் டெக்னீசியனான மருமகளும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியான மூதாட்டியின் சடலத்தை 5 அடுக்கு பிளாஸ்டிக் சீட்டால் சுற்றி ஆம்புலன்சில் எடுத்துச்சென்ற மாநகராட்சி ஊழியர்கள் 12 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் குழி தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.

இந்த காட்சிகள் கொரோனா கிருமி மிகக்கொடியது என்பதை தூத்துக்குடி மக்களுக்கு உணர்த்தியது கொரோனா நோய் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்தது 10 முதல் 14 நாட்கள் கழித்து தான் தெரியவரும் என்பதால் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் யார் ? என்பதை எல்லாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாது.

அவர்கள் எங்கு கைவைத்து சென்றார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. இதுபோன்று ஒருவர் தொட்டு மற்றொருவருக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

பல கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்க, சிலர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அத்தியாவசிய பொருட்களை வாங்க முன் எச்சரிக்கை இல்லாமல் சென்று வந்த நிலையில், தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதல் உயிர்பலி நிகழ்ந்திருக்கின்றது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே மூதாட்டி வசித்து வந்த பகுதியை சுற்றி உள்ள 7 தெருக்கள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள 58 ஆயிரம் வீடுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. அதே போல ஏ.வி.எம் மருத்துவ மனைக்கு கடந்த 2 வாரங்களில் வந்து சென்ற 500க்கும் மேற்பட்டவர்களையும் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தி தினமும் 3 வேளையும், செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்

தற்போதைய சூழலில் தூத்துக்குடி மக்கள் வீட்டில் இருந்து எதற்காக வெளியில் சென்றாலும் கையுறையுடன் செல்லுங்கள், முககவசம் அணிந்து செல்லுங்கள், வெளியில் இருந்து திரும்பியவுடன் முககவசத்தையும் கையுரையையும் பத்திரமாக அகற்றிவிட்டு, வீட்டில் உள்ள யாரையும் எந்த பொருளையும் தொடாமல் கைகளை சோப்பு போட்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது தான் பாதுகாப்பானது என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments