ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

0 6057

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு விதித்த 21 நாள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளும் பிரதமரிடம் பரிந்துரை செய்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் கொரோனோவை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்த காணொலி கலந்துரையாடல் மூலம் மோடி முக்கிய முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய போது ஊரடங்கை ஒரேயடியாக நீக்கி விடுவது சாத்தியமில்லை என்று மோடி குறிப்பிட்டுள்ளதால் படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மனித உயிரையும் காப்பதே தமது முதன்மையான நோக்கம் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று விவகாரம் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே 2 முறை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments