நாட்டிலேயே கேரளாவில் முதன் முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை
நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கும் முறை மிக விரைவில் துவங்குகிறது.
இதற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் எந்த நேரத்திலும் வழங்குவார் என கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும்.
கேரளாவில் ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் 4 மருத்துவக்கல்லூரிகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Comments