ஈரப் பதமான கடல் உணவு, இறைச்சி சந்தைகளை சீனா மூட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

0 15596

ஈரப் பதமான கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தைகளை (wet markets) சீனா உடனடியாக மூட வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

வூகானிலுள்ள அத்தகைய சந்தையில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இதை சுட்டிக்காட்டி, சீனாவிலுள்ள ஈர பதமான சந்தைகள் அனைத்தையும் மூட வலியுறுத்தி, அமெரிக்காவுக்கான சீன தூதர் சுயி தியான்காய்க்கு (Cui Tiankai))  செனட் உறுப்பினர்கள் 11 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், உலக அளவில் ஏற்பட்ட பல்வேறு உடல்நல  பிரச்னைகளுக்கு அந்த சந்தைகள் மூலக்காரணமாக இருந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த சந்தைகளை உடனடியாக மூடுவதன் மூலம், கூடுதல் உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்வதில் இருந்து சீன மக்களையும், சர்வதேச சமூகத்தையும் காக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments