சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை
நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு, தாராளமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய, தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமையல் எரிவாயு வுக்கான கூடுதல் தேவையை எதிர்கொள்ள கூடுதலாக 50 சதவீதம் இறக்குமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எத்தகைய சூழ்நிலை உருவானாலும், நிலைமையை சமாளிக்க ஏதுவாக, நிறுவனத்தின் LPG பாட்லிங் பிளான்ட்களில், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் இரவு - பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
தற்போதைய சூழலில், நாளொன்றுக்கு 26 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை என கேட்டுக் கொண்டுள்ளது.
Comments