பஞ்சாப் மாநிலத்தில் மே 1ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

0 5134

பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவு வருகிற மே மாதம் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நிறைவடைகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கை நீட்டிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு மாநில அரசுகளும் கோரி வருகின்றன. இதுகுறித்து பிரதமர் ஆலோசித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கை, வருகிற மே மாதம் ஒன்றாம் தேதி வரை, நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின், பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், ஊடரங்கு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments