வெளிநாட்டு அரசுகளுக்கே ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி: அரசு வட்டாரங்கள்
வெளிநாட்டு அரசுகளுக்கே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை (hydroxychloroquine) இந்தியா ஏற்றுமதி செய்யும், தனியார் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
கொரோனாவின் தீவிரத்தை தடுக்கலாம் என நம்பப்படுவதால், அந்த மருந்தை ஏற்றுமதி செய்யும்படி 20 நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு கோரிக்கை வந்துள்ளது. அதன் ஏற்றுமதி குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் அளித்துள்ள விளக்கத்தில், ஏற்றுமதி தடை பட்டியலில் மருந்து நீடிப்பதாகவும், இருப்பினும் மருத்துவத்தில் இந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கு உதவ மருந்தை அளிக்கும் கொள்கையை அரசு கடைபிடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளன.
மருந்து ஏற்றுமதியின்போது இந்தியாவில் இருப்பு நிலை, இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதும், விண்ணப்பித்த நாடுகளின் தேவை குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் எனவும் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
Comments