அடுத்த சில வாரங்கள் சவால் மிகுந்தவை- மருத்துவத் துறை வல்லுநர்கள்

0 2618

இந்தியாவில் முன்கூட்டியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா உயிரிழப்பு விகிதம் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா குறித்த ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில், மருத்துவத்துறை வல்லுநர்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக தொடர்வதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நாராயண ஹாஸ்பிட்டல்ஸ் குழும தலைவர் டாக்டர்.தேவி பிரசாத் ஷெட்டி தெரிவித்தார்.

அடுத்த சில வாரங்கள் சவால் மிகுந்தவை என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர். ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். ஹாட்ஸ்பாட்டுகளில் இருந்து பிற பகுதிகளுக்கு கொரோனா பரவுவதைத் தடுப்பதே அடுத்த சில மாதங்களுக்கு சவாலான பணி என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகழுவுவதன் மூலமே அது சாத்தியம் என டாக்டர். ரண்தீப் குலேரியா தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments