கணினிகளில் ஊடுருவி சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவது அதிகரிப்பு
வீட்டில் இருந்தபடி அலுவலக பணிகளை மேலும் பலர் பார்த்து வரும் நிலையில், இதை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தங்கள் கைவரிசையை காட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொரோனா நிவாரண நிதிக்கு பிரதமர் மோடி பங்களிப்பு கோரியதும், பிரதமர் அலுவலக யூபிஐ முகவரி போல ஏராளமான போலி முகவரிகள் வெளியாகின. இது மத்திய உள்துறை அமைச்சக தலையிட்டால் சரி செய்யப்பட்டது.
இதுமட்டுமன்றி இணையதள பயன்பாட்டாளர்களின் திரையில் உங்கள் பகுதிக்கு அருகில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் தெரிந்து கொள்ளலாம் என லிங்க் வருகிறது.
அதை யாரும் கிளிக் செய்தால் ஹேக்கிங்குக்கு ஆளாகும் நிலை வருகிறது. அலுவலக கணினி அமைப்புகளில் பாதுகாப்பு இருப்பதால், எளிதில் ஊடுருவ முடியாது.
வீட்டிலிருந்து பணிபுரிவோரின் கணினிகளில் பாதுகாப்பு இல்லாததால் எளிதில் ஊடுருவ முடியும். இதை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி குற்றமிழைப்பதாக கூறப்படுகிறது.
Comments