ட்விட்டரில் டிரென்ட் ஆன விமான நிறுவனங்கள்

0 2932

ஊரடங்கால் முடங்கி இருக்கும் விமான நிறுவனங்களான இண்டிகோவும், விஸ்தாராவும் ஒன்றை ஒன்று வேடிக்கையாக சமூக வலைதளங்களில் சீண்டிக் கொள்வது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இன்று காலை பதிவிட்ட டுவிட்டரில், Fly Higher என்ற விஸ்தாராவின் வாசகத்தை கிண்டலடித்த இண்டிகோ, இப்போது அதன் விமானங்கள் உயரமாக பறப்பதாக தெரியவில்லையே என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு பதிலளித்துள்ள விஸ்தாரா, இண்டிகோவின் துணை வாசகமான Fly Smart என்ற சொற்றடரை கோடிட்டுவிட்டு, இந்த கால கட்டத்தில் பறப்பது ஸ்மார்ட்டான செயலாக இருக்காதே இண்டிகோ என்று டுவிட் செய்துள்ளது. இதே போன்று ஸ்பைஸ்ஜெட்டும், ஏர் ஏசியாவும் அவற்றின் சிவப்பு கலரை வைத்து பரஸ்பரம் கலாய்த்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments