தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க “டெலி கவுன்சிலிங்”

0 1258

திருப்பூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கவும் “டெலி கவுன்சிலிங்" எனப்படும் தொலைபேசி வழி ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகரில் 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை நாள்தோறும் தொடர்புகொண்டு, உடல்நிலை குறித்து கேட்டறிவதோடு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் இந்த டெலி கவுன்சிலிங் குழு நடவடிக்கை எடுக்கும்.

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும் இந்தக் குழுவை 0421- 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த டெலி கவுன்சிலிங் திட்டம் விரைவில் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments