சென்னையில் வீடு-வீடாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 605 பேரை தனிமையில் இருக்க அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு - வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சளி, இருமல், காய்ச்சலுடன் ஆயிரத்து 222 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வீட்டிலும் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் மூலம் 5 நாள்களாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
அப்போது வீட்டில் இருப்போருக்கு இருமல், சளி, காய்ச்சல் இருக்கிறதா என விவரம் கேட்டு பதிவு செய்யப்பட்டது. இதில் ஆயிரத்து 222 பேருக்கு, இருமல், சளி, காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 617 பேருக்கு ஏற்பட்ட அறிகுறி சாதாரணமானதுதான் எனத் தெரிவித்தனர். இதையடுத்து எஞ்சிய 605 பேரும், 14 நாள்களுக்கு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments