கொரோனா பரவல் அதிகளவில் இல்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
நாட்டில் கொரோனா பரவும் விகிதம் மிகவும் அதிகளவில் இல்லை என்று ஐசிஎம்ஆர் (Icmr) எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 6 ஆயிரத்து 400க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 199 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூத்த அதிகாரி மனோஜ் முர்ஹேகர் என்பவர், இந்தியாவில் கொரோனா பரவும் விகிதம் கடந்த ஒன்னரை மாதத்தில் 3 முதல் 5 சதவீதமாகவே பதிவாகி இருந்ததாக தெரிவித்தார்.
கொரோனா பரவல் விகிதமானது, நாட்டில் சீரான அளவிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாட்டில் கொரோனா பரவல் விகிதம் இதுவரை மிகவும் அதிகளவில் பதிவாகவில்லை எனவும் முர்ஹேகர் குறிப்பிட்டார்.
Comments