இத்தாலியில் கொரோனாவுக்கு 100 மருத்துவர்கள் பலி- வெளியான அதிர்ச்சி தகவல்

0 6549

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 100 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 18 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்து வந்த 100 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் தொற்று பாதித்து பலியானதாக கூறப்படுகிறது.

இதில், கடந்த மாதம் மீண்டும் பணிக்கு சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர்களும் அடங்குவர். நாட்டில் ஒட்டுமொத்தமாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் மருத்துவ துறையில் பணிபுரிந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments