கச்சா எண்ணெய் வழங்கலை ஒருநாளைக்கு 1.5 கோடி பீப்பாய் குறைக்க முடிவு

0 3524

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி பீப்பாய் குறைக்க சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.

கொரோனா பரவலால் உலக நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை 60 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் வழங்கல் 30 விழுக்காடு குறைந்துள்ளது. இந்நிலையில் விலை வீழ்ச்சியைத் தடுக்க எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது பற்றி சவூதி அரேபிய, ரஷ்யப் பிரதிநிதிகள் நேற்றுப் பேச்சு நடத்தினர்.

இதில் ஓபெக் நாடுகள் ஒரு நாளைக்கு ஒரு கோடி பீப்பாய்களும், மற்ற நாடுகள் ஒரு நாளைக்கு 50 லட்சம் பீப்பாய்களும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. விலைவீழ்ச்சியால் அமெரிக்காவில் ஏற்கெனவே உற்பத்தி குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் டிரம்ப், இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்நிலையில் சவூதி அரேபியாவில் இன்று நடைபெறும் ஜி 20 நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments