ஈஸ்டரை உற்சாகத்துடன் கொண்டாடிய விலங்குகள்
சிலி நாட்டில் சான்டியாகோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் ஈஸ்டர் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடின.
அங்குள்ள பியூன் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் உராங்குட்டான், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கு ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வண்ணமய முட்டையில் பழம் மற்றும் இறைச்சி ஆகியவை நிரப்ப ப்பட்டு அவைகளுக்கு உணவாக அளிக்கப்பட்டன.
கடந்த 10ஆண்டுகளாக ஈஸ்டர் தினத்தன்று விலங்குகளுக்கு இதுபோல் உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும், இது அந்த விலங்குகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் மிருகக்காட்சி சாலையின் மேலாளர் தெரிவித்தார். கொரோனா காரணமாக இந்த மிருகக்காட்சி சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
Comments