ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று ஆசி வழங்கிய கத்தோலிக்க திருச்சபை தந்தை
பொலிவியாவில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்தவ திருச்சபை தந்தை ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்.
கோச்சபம்பாவில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக பொலிவியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கத்தோலிக்க திருச்சபையின் தந்தை லைமிஸ் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கினார்.
Comments