ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசன முன்பதிவு தற்காலிக நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா இன்று வெளியாக இருந்த நிலையில் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் மே 30ம் தேதி வரை தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Comments