விஜய்மல்லையாவுக்கு எதிராக இந்திய வங்கிகள் கொண்டு வந்த திவால் வழக்கு?
தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு எதிராக இந்திய வங்கிகள் கொண்டு வந்த திவால் மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம் அதனை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 இந்திய அரசு வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 10ந் தேதி அன்று விஜய்மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 9ஆயிரத்து 902 கோடி ரூபாய் கடன் வழங்கிய வழக்கில் இந்த திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி பிரிக்ஸ், கடன்களை முழுமையாக செலுத்த மல்லையாவுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் விஜய்மல்லையா திவால் நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments