மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரும் மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவிற்கு சென்ற 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கால நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக மலேஷியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் என்பவர் சார்பில் அவரது வழக்கறிஞர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில், இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Comments