கொரோனா எதிரொலியாக தினசரி செய்தித்தாள்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

0 971

கொரோனா அச்சுறுத்தல் விலக்கிக் கொள்ளப்படும் வரை தினசரி செய்தித்தாள் வெளிவர, தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுவதற்கான குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments