உயிர்காக்கும் மருந்துகளை அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்த இந்தியா: மருந்து ஏற்றுமதியால் வலுப்பெறும் நட்புறவு..!
அண்டை நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா அனுப்பி வருவதால் நட்பு வலுப்பெற்றுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பயன்படும் எனத் தெரிவந்ததில் இருந்து, அதை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் அண்டைநாடுகளான பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர், செசல்ஸ், மொரீசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் ஆகிய மருந்துகளை இந்தியா நன்கொடையாக அனுப்பி வருகிறது.
இதேபோல் ஏற்கெனவே பெற்றுள்ள ஏற்றுமதி ஆணைகளின்படி அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், பக்ரைன், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் மருந்துகள் அனுப்பப்பட உள்ளன. இதன்மூலம் உலக நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.
Comments