மே மாதம் வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்பு: பிரிட்டன் பத்திரிகைகள்
கொரோனா பாதித்து ஐ.சி.யு.வில் 4ஆவது நாளாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் சிகிச்சை பெறும் நிலையில், அந்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை தடுக்க பிரிட்டனில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. போரீஸ் ஜான்சன் சிகிச்சையில் இருப்பதால், அவருக்கு பதிலாக, கொரோனா தடுப்பு அமைச்சர்கள் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) தலைமை வகிக்கிறார்.
அவரது தலைமையில் அமைச்சர்கள் குழு கூடி, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன. மே மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் பிரிட்டனை சேர்ந்த பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments