பெரிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதாக எல் அன்ட் டி தகவல்
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பெரிய ஒப்பந்தங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக பிரபல கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி (L&T) தெரிவித்துள்ளது.
சென்னையில் நகர்ப்புற மின் விநியோகம் மற்றும் தொலைதூர மின்பகர்மான பிரிவுகளின் திறனை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக மும்பை பங்கு சந்தையில் அது தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மின்விநியோகம் நடத்தும் பல நிறுவனங்களுக்கு வோல்டேஜ் கேபாசிட்டர்களை நிறுவும் ஒப்பந்தமும் கிடைத்துள்ளது.
அதே போன்று ஓமன் தேசிய பெட்ரோலியம் நிறுவனத்தின் மினா அல் அஹமதி (Mina Al Ahmadi) சுத்திகரிப்பு ஆலையில் மின் விநியோகத்திற்கான துணை மின் நிலையங்களை மேம்படுத்தும் ஒப்பந்தமும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments