வீட்டில் சுய தனிமையில் உள்ள தப்லிக் ஜமாத் தலைவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது

0 2133

தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத், டெல்லியில் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

அரசு உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக, மவுலானா சாத் உள்ளிட்ட 7 தப்லிக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் டெல்லி குற்றவியல் பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியபோது, தாம் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக மவுலானா சாத் பதிலளித்திருந்தார். இந்நிலையில், டெல்லி ஜாகீர் நகரில் உள்ள தமது வீட்டில் மவுலானா சாத் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதோடு, அரசின் தனிமை முகாமுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. வீடியோகால் மூலம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments