ஊரடங்கு தொடங்கியதில் இருந்து வதந்தி, வெறுப்புப் பேச்சு தொடர்பாக 132 வழக்குகள் பதிவு
சமூக வலைத்தளங்களில் வெறுப்பைத் தூண்டும் பதிவுகளும், சமூகங்களிடையே மோதலைத் தூண்டும் பதிவுகளும் அதிகரித்துள்ளதாக மகாராஷ்டிரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தொடங்கியதில் இருந்து பொய்ச்செய்தி, வதந்தி, வெறுப்புப் பேச்சு ஆகியவை தொடர்பாக 132 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரக் காவல்துறையின் இணையத்தளக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமூகங்களிடையே வெறுப்பை விதைக்கும் பேச்சுக்காக மட்டும் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இணையத்தளக் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பால்சிங் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
Comments