ஊரடங்கால் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
மதுரையில் ஊரடங்கால் மளிகைப் பொருட்கள் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள் வரத்து குறைவால் மளிகை பொருட்கள் வினியோகம் 95 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு அமலான 14 நாட்களில் மளிகைப் பொருட்களில் 75 சதவீதம் விற்று தீர்ந்து விட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் கொரோனா பீதியால் உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள், ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் பணிக்கு வரத் தயக்கம் காட்டுவதால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் மதுரை மாவட்டத்தில் ரவை, மைதா, பாமாயில், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, சீரகம், மிளகு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
Comments