இந்தூரில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு

0 1466

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்துத் தனிமை வார்டில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதனால் மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவர் உயிரிழந்தது இதுதான் முதன்முறையாகும். மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த இந்தூர், போபால், உஜ்ஜைன் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments