மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,297ஆக உயர்வு

0 1192

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 297-ஆக உயர்ந்துள்ளது.

அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக 162 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 297ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் மும்பையில் கொரோனா பாதித்த நபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக 381 இடங்களை மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது. அந்த 381 இடங்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (containment zones) மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல் அந்த இடங்களில் வசிக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் மும்பை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments